தினமும் முருங்கைக் கீரை சாப்பிடுவதன் நன்மைகள்

By Gowthami Subramani
05 Jan 2025, 14:49 IST

முருங்கை கீரையில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் முருங்கைக் கீரை சாப்பிடுவதால் என்னென்ன ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம் என்பது குறித்து காணலாம்.

ஊட்டச்சத்துக்கள்

முருங்கை கீரையில், வைட்டமின்கள் ஏ, பி, சி, டி, ஈ, கே மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மேலும் இதில் துத்தநாகம், தாமிரம், இரும்பு, கால்சியம், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளது

எடையிழப்புக்கு

முருங்கை இலையில் குளோரோஜெனிக் அமிலம் மற்றும் உடல் பருமன் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. எனவே, உடல் பருமனை குறைக்க முருங்கை இலைகளை எடுத்துக் கொள்ளலாம்

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த

இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த முருங்கை இலை கஷாயம் பெரிதும் உதவுகிறது. இது சிஸ்டாலிக் மற்றும் டயஸ்டாலிக் இரத்த அழுத்தம் இரண்டிலும் குறிப்பிடத்தக்க அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

நீரிழிவு நோய்க்கு

முருங்கை இலையில் நீரிழிவு எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. எனவே இதை உட்கொள்வதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம்

புண்களைக் குணமாக்க

முருங்கை இலைகளை சாப்பிட்டு வருவதன் மூலம் வயிறு தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்கலாம். இதில் அல்சர் எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. எனவே இது அல்சர் அபாயத்தைத் தடுக்க உதவுகிறது

இதய ஆரோக்கியத்திற்கு

முருங்கை கீரையில் உள்ள அதிக ஆக்ஸிஜனேற்றங்கள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்கிறது. இதன் மூலம் இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கலாம். முருங்கை இலைகளை சாப்பிடுவதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைக்கலாம்

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

முருங்கை இலைகளில் நிறைந்துள்ள பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இந்த வலுவான நோய் எதிர்ப்பு சக்தி பல்வேறு தொற்றுநோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது