வயதானாலும் ஓடி ஆடி திரிய வேண்டுமா.? முடக்கத்தான் கீரை இருக்க கவலை எதுக்கு.!

By Ishvarya Gurumurthy G
16 Dec 2024, 12:43 IST

முடக்கத்தான் கீரை பல உடல்நலப் பிரச்னைகளைத் தீர்க்கும் திறனுக்காக தனித்து நிற்கிறது. முடக்கத்தான் கீரையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.

மூட்டு வலியை நீக்கும்

முடக்கத்தான் கீரையின் முக்கிய நன்மைகளில் ஒன்று, மூட்டு வலியைக் குறைக்கும். இதன் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மூட்டு பிரச்சனை உள்ளவர்களுக்கு வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் உதவுகிறது.

சுவாச ஆரோக்கியம் மேம்படும்

ஒவ்வாமை, இருமல், சளி உள்ளிட்ட சுவாச பிரச்சனைகளுக்கு இது நல்ல மருந்தாகும். இதன் ஆண்டிபயாடிக் பண்புகள் நுரையீரலில் உள்ள நெரிசலைத் தணிக்க உதவுவதுடன் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் நன்மை பயக்கும்.

செரிமானத்திற்கு உதவும்

முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் பிற தொடர்புடைய பிரச்சனைகளுக்கு சிறந்த சிகிச்சையாகும்.

தோல் ஆரோக்கியம்

முடக்கத்தான் கீரை முகப்பரு, உலர்ந்த சருமம், சொறி போன்ற பல தோல் நோய்களுக்கான மூலிகை மருந்தாகும். இலைகளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் வீக்கத்தைக் குறைக்கிறது.

முடி வளர்ச்சிக்கு உதவும்

முடக்கத்தான் கீரை ஊட்டச்சத்து நிறைந்தது மற்றும் உச்சந்தலைக்கு ஊட்டமளிக்கிறது. இதனால் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. பொடுகு மற்றும் தொற்றுநோய்களில் இருந்து உச்சந்தலையை காப்பாற்றக்கூடிய பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் இதில் உள்ளன.

வலுவான எலும்பு

முடக்கத்தான் கீரையில் கால்சியம் அதிகம் உள்ளது, இது எலும்புகளை வளர்க்கவும், ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கவும் உதவுகிறது.