ஆரோக்கியம் டபுளாக... பாலுடன் இந்த 5 பொருட்களை கலந்து குடிங்க!

By Kanimozhi Pannerselvam
12 Feb 2024, 20:17 IST

ஒரு டம்ளர் பாலில் ஒரு ஸ்பூன் சுத்தமான தேன் கலந்து குடிப்பதால், பாலின் சுவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், இரண்டிலும் உள்ள சத்துக்களால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த சியா விதைகளை பாலுடன் கலந்து சாப்பிடலாம். இது உடலுக்கு கூடுதல் ஆற்றலை வழங்குவதோடு, இதயத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும்.

வைட்டமின்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த வேர்க்கடலை வெண்ணெய் (பீனட் பட்டர்) ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். பாலில் கலந்து குடிப்பதால் அதன் ஊட்டச்சத்து மதிப்பு அதிகரிக்கிறது.

ஒரு கிளாஸ் பாலில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை சேர்த்து குடித்தால், பாலின் சுவை அதிகரிக்கும். மேலும், உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

பேரிச்சம்பழம் பல உடல்நல பிரச்சனைகளை நீக்கும். பாலுடன் சேர்த்து சாப்பிடுவதால் உடலுக்கு அதிக நன்மைகள் கிடைக்கும். உடல் வலிமை பெறுகிறது, பாலியல் ஆரோக்கியம் மேம்படும், மனமும் கூர்மையாகிறது.