யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவும் தினை வகைகள்

By Gowthami Subramani
03 Dec 2024, 19:23 IST

உடலில் யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும் போது வீக்கம் மற்றும் கீல்வாதம் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க, இயற்கையாகவே யூரிக் அமிலத்தைக் குறைப்பது அவசியமாகும். இதில் யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவும் தினை வகைகள் சிலவற்றைக் காணலாம்.

ஜோவர்

இதில் அதிகளவிலான மக்னீசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவுகிறது

ராகி

ராகியில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள் சிறுநீரக கற்களைத் தடுக்கவும் யூரிக் அமிலத்தைக் குறைக்கவும் உதவுகிறது

பஜ்ரா

இது குறைந்த பியூரின் கொண்ட தினையாகும். இவை உடலிலிருந்து யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்துகிறது

கோடோ தினை

கோடோ தினையும் குறைந்த பியூரின் கொண்டதாகும். இவை யூரிக் அமிலத்தைக் குறைத்து வீக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது

ஓட்ஸ்

ஓட்ஸ் ரொட்டியில் 50 முதல் 150 மில்லிகிராம் பியூரின்கள் நிறைந்துள்ளது. இவை யூரிக் அமிலத்தைக் குறைக்க உதவுகிறது