மாம்பழம் சாப்பிடுவதில் உள்ள நன்மை, தீமை என்னென்ன தெரியுமா?

By Gowthami Subramani
16 Apr 2024, 17:23 IST

மாங்காய் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை, தீமை இரண்டையும் தரவல்லது. இதில் மாங்காய் சாப்பிடுவதால் உடலுக்குக் கிடைக்கும் நன்மை, தீமைகளைக் காணலாம்

புற்றுநோயைத் தடுக்க

மாம்பழத்தில் குர்செடின், ஃபிசெடின், கேலிக் அமிலம், அஸ்ட்ரகலின் போன்றவை புற்றுநோய்க்கு எதிராக பாதுகாப்பானதாகும்

கண் ஆரோக்கியத்திற்கு

மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்துக்கள் உள்ளது. இது குருட்டுத்தன்மை, உலர் கண்கள் மற்றும் சிவத்தல் போன்ற கண் பிரச்சனையைத் தடுத்து கண் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க

மாம்பழத்தில் உள்ள வைட்டமின் சி, ஏ போன்றவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. இது பல்வேறு நோய்களுக்கு எதிராக போராடுகிறது

பக்கவிளைவுகள்

மாம்பழத்தை உட்கொள்வது உடலுக்கு நன்மை பயக்குமெனினும், இதனை அதிகம் உட்கொள்வது தீங்கு விளைவிக்கலாம்

அதிகளவு சர்க்கரை

மாம்பழத்தை அதிகளவு உட்கொள்வது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கலாம். இது உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்

எடை அதிகரிப்பு

மாம்பழத்தில் அதிக கலோரிகள் நிறைந்துள்ளது. இது உடல் எடையைக் குறைக்க முயற்சிப்பவர்களுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது

ஒவ்வாமை

மாம்பழத்தில் உருஷியோல் என்ற வேதிப்பொருள் நிறைந்துள்ளது. இதனால், தோல் பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் அரிப்பு, அலர்ஜி, வயிற்று வலி, மூக்கு ஒழுகுதல் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்