அடேங்கப்பா! மல்லிகைப் பூ ஆரோக்கியத்திற்கு இவ்வளவு நல்லதா?

By Devaki Jeganathan
15 Jan 2024, 14:54 IST

மல்லிகைப் பூ மணம் நிறைந்தது. இதன் வாசனை மன அழுத்தத்தை போக்க உதவுகிறது. பூக்கள் தவிர, அதன் இலைகளும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மல்லிகை பூவின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

வாய் புண் குணமாகும்

வாய் புண்களை குணப்படுத்த மல்லிகை இலைகளை பயன்படுத்தவும். இதில், உள்ள மருத்துவ குணங்கள் அல்சரை குணப்படுத்தும்.

தலைவலி சரியாகும்

மல்லிகைப் பூ தலைவலியைக் குணப்படுத்த உதவுகிறது. இதற்கு, மல்லிகைப் பூவை நன்றாக அரைக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை தலையில் தடவவும்.

முகப் பொலிவு

சருமத்தின் பொலிவை அதிகரிக்க மல்லிகைப் பூவைப் பயன்படுத்துங்கள். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவினால் முகப்பரு பிரச்சனையும் நீங்கும்.

தோல் நோய் குணமாகும்

மல்லிகை இலை எண்ணெய் தோல் நோய் பிரச்சனையை நீக்குகிறது. இதன் எண்ணெயைத் தடவினால் காயங்களும் விரைவில் குணமாகும்.

ஈறு வலி குணமாகும்

ஈறுகளில் வலி ஏற்பட்டால், மல்லிகை இலைகளை கஷாயம் செய்து, அதனுடன் வாய் கொப்பளிக்கவும். இதில் உள்ள மருத்துவ குணங்கள் வலியை குணப்படுத்தும்.

கண்களுக்கு நல்லது

கண் வலி ஏற்பட்டால், மல்லிகைப் பூக்களால் செய்யப்பட்ட பேஸ்ட்டைத் தடவவும். பேஸ்ட் வலியைக் குறைக்கிறது. தவிர, இதைப் பயன்படுத்துவதன் மூலம் கண்பார்வை மேம்படும்.