கோடை காலத்தில் சந்தைகளில் எளிமையாக கிடைக்க கூடிய பழங்களில் ஒன்று லிச்சி. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. லிச்சி பழம் மட்டும் அல்ல இதன் கொட்டையும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. லிச்சி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.
வீக்கம் குறையும்
உடலில் வீக்கம் ஏற்பட்டால், நீங்கள் லிச்சி விதைகளைப் பயன்படுத்தலாம். இதற்கு விதைகளை அரைத்து அதன் பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவவும்.
உடல் வலி நீங்கும்
லிச்சி விதை பேஸ்ட்டைப் பயன்படுத்துவது வீக்கம் மற்றும் உடல் வலியைக் குறைக்க உதவுகிறது. தவிர, அவை புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டிருக்கின்றன.
செரிமானத்திற்கு நல்லது
செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் பேரில் லிச்சி விதைகளைப் பயன்படுத்தலாம். இது வயிறு தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.
எடை குறையும்
இன்றைய காலக்கட்டத்தில், மோசமான வாழ்க்கை முறையால், உடல் எடை அதிகரிப்பது ஒரு பொதுவான பிரச்சனையாகிவிட்டது. இந்நிலையில், லிச்சி விதைகளின் உதவி எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
லிச்சி விதை நல்லதா?
இவை உடலுக்கு நன்மை பயக்கும். ஆனால், அவற்றை நேரடியாக உட்கொள்ளக்கூடாது. மேலும், லிச்சி விதைகளை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும்.
லிச்சி விதையின் தீமைகள்
இவை ஹைப்போகிளிசின் ஏ மற்றும் அனலாக் சைக்ளோப்ரோபைல்-கிளைசின் போன்ற சக்திவாய்ந்த நச்சு கலவைகளைக் கொண்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில் அவற்றை உண்பதால் உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.
எப்படி பயன்படுத்துவது
லிச்சி விதைகளை அரைத்து பேஸ்டாகப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில், ஆயுர்வேதத்தில், லிச்சி விதை தூள் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.