உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைக் கொண்ட பழங்களில் கிவி பழமும் அடங்கும். இதில் கிவி சாறு தயாரிப்பதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்
செரிமான ஆரோக்கியத்திற்கு
கிவி சாறு அருந்துவது செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இது அஜீரண பிரச்சனையைக் குறைக்கவும், எரிச்சலைக் குறைக்கவும் உதவுகிறது
புற்றுநோய்க்கு எதிராக
கிவி பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள், கரோட்டினாய்டுகள், நார்ச்சத்துக்கள் போன்ற பைட்டோகான்ஸ்டிட்யூட்டுகள் புற்றுநோய்க்கு நன்மை தருகிறது. இதில் உள்ள பைட்டோகெமிக்கல் கேடசின் புற்றுநோய் எதிர்ப்பு முகவர்களால் ஏற்படும் நச்சுத்தன்மையைக் குறைக்க உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
கிவி சாற்றில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும் இதன் நார்ச்சத்துக்கள் உடலில் கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது
உயர் இரத்த அழுத்தத்திற்கு
கிவி சாற்றில் நிறைந்துள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைச் சீராக வைத்திருக்க உதவுகிறது. எனினும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் சுய மருந்துகளை விட மருத்துவ உதவியை நாடுவது அவசியம்
கண் ஆரோக்கியத்திற்கு
கிவி சாற்றில் உள்ள பைட்டோ கெமிக்கல் லுடீன் கண்களைப் பாதுகாக்கக் கூடிய கரோட்டினாய்டுகளை அதிகம் கொண்டுள்ளது. வயது தொடர்பான குருட்டுத்தன்மைக்கு லுடீன் மிகவும் நன்மை பயக்கும்
முடி ஆரோக்கியத்திற்கு
கிவி சாற்றில் துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம் போன்றவை உள்ளது. இதில் உள்ள வைட்டமின் ஈ, சி போன்றவை முடி உதிர்வைக் குறைக்க உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
கிவி சாறு வைட்டமின் ஈ, சி போன்றவை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வைட்டமின் சி ஆக்ஸிஜனேற்றியாக செயல்பட்டு சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கிறது