குளிர்காலத்தில் கீரை சாப்பிடுவது இவ்வளவு நல்லதா?

By Devaki Jeganathan
21 Dec 2023, 23:06 IST

குளிர்காலம் என்னதான் சுகமானதாக இருந்தாலும், நோய் பரவல் அதிகமாக காணப்படும். எனவே, நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அந்தவகையில், கீரைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. குளிர்காலத்தில் கீரை சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மலச்சிக்கல்

கீரையில் போதுமான அளவு நார்ச்சத்து உள்ளது. எனவே, இதை உட்கொள்வது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

சீரான இரத்த ஓட்டம்

ஏதாவது ஒரு கீரையை இரவு உணவில் சேர்த்து வந்தால், உடலில் இரத்த ஓட்டம் சீராகும்.

நோய் எதிர்ப்பு சக்தி

குளிர்காலத்தில் கீரை சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இந்நிலையில், உடல் தொடர்பான பிரச்சினைகள் குறையும்.

நீரிழிவு நோய்

புரதம், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த கீரைகளை சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.

தோலுக்கு நல்லது

உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதுடன், கீரைகள் சருமத்திற்கும் நல்லது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

கண்களுக்கு நல்லது

கீரையை தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால், கண் தசைகள் வலுவடையும். மேலும் இதில் உள்ள சத்துக்கள் கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

எடை குறைக்க

கீரை சாப்பிடுவதும் உடல் எடையை குறைக்க சிறந்த வலி. இதில், கலோரிகள் மிகக் குறைவு. எனவே, கீரைகளை சாப்பிடுவது உங்களுக்கு நன்மை பயக்கும்.