கற்றாழை டீ ஆரோக்கியத்திற்கு எவ்வளவு நல்லது தெரியுமா?

By Devaki Jeganathan
16 Nov 2024, 21:32 IST

கற்றாழை டீயில் ஏராளமான வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த டீ குடிப்பதால் உடலுக்குப் பல்வேறு வகையான நன்மைகளைப் பெறலாம். கற்றாழையின் டீயின் நன்மைகளைக் காணலாம்.

கற்றாழை டீயின் சத்துக்கள்

கற்றாழை தேநீர் எனப்படும் டீயில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, பி3, பி12, சி மற்றும் ஈ போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. கற்றாழை தேநீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

செரிமான மேம்பாட்டிற்கு

கற்றாழை டீ ஆனது செரிமானத்திற்கு பெரும் உதவியாக உள்ளது. இது வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு டானிக்காக செயல்படுகிறது.

கல்லீரலை சுத்தப்படுத்த

இந்த டீயை அருந்துவதன் மூலம், உடலில் பித்த உற்பத்தி தூண்டப்பட்டு கல்லீரலை சுத்தப்படுத்த உதவுகிறது. மேலும், இது கல்லீரல் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கற்றாழை தேநீர் உதவுகிறது. மன அழுத்தத்தைக் குறைப்பதிலும் கற்றாழை டீ பயன்படுகிறது.

உடல் எடை குறைக்க

கற்றாழை தேநீர் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. மேலும், இது வலிமையான தசைகளை உருவாக்கலாம்.

நீரிழவு நோயாளிகளுக்கு

இந்த டீயில் என்சைம்கள் எனப்படும் இயற்கை சர்க்கரைகள் உள்ளது. இவை நீரிழவு நோயாளிகளுக்கு உதவுகிறது.