அதிகப்படியான உணவு உண்பதால் உடலில் கூடுதல் கொழுப்பு அதிகரித்து உடல் அதிகரிக்கும். உடல் எடையை குறைக்க நீர் விரதம் எடுத்துக் கொள்ளலாம். இது உடல் எடையை குறைப்பதைத் தவிர, இந்த முறை உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும்.
நீர் விரதம் என்றால் என்ன?
நீர் விரதம் (Water Fasting) விரதத்தின் போது நீங்கள் தண்ணீரை மட்டுமே உட்கொள்ள வேண்டும். பொதுவாக மக்கள் 24 முதல் 72 மணி நேரம் தண்ணீர் விரதம் மேற்கொள்வர். இருப்பினும், உங்கள் உடலைப் பொறுத்து அதற்கான நேரத்தை நீங்கள் நிர்ணயிக்கலாம்.
முக்கிய குறிப்பு
நீங்கள் நீர் விரதம் செய்ய நினைத்தால், கண்டிப்பாக மருத்துவரை அணுக வேண்டும். உங்கள் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இதை செய்ய வேண்டாம். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதன் பலன்களைப் பற்றி பார்க்கலாம்.
சர்க்கரை நோய்
நீரிழிவு நோயின் அபாயத்தை நீர் உண்ணாவிரதத்தின் உதவியுடன் குறைக்கலாம். இந்த முறையின் மூலம், இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தலாம் மற்றும் இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
இதய ஆரோக்கியம்
நீர் உண்ணாவிரதம் இதய ஆரோக்கியத்திற்கும் நல்லது. ஏனெனில், இது கொழுப்பின் அளவைக் குறைக்கும். இந்நிலையில், இதய நோய்களின் ஆபத்து குறைகிறது.
புற்றுநோய்
நீர் விரதத்தின் உதவியுடன், புற்றுநோய் போன்ற கொடிய நோய்களின் அபாயத்தை குறைக்கலாம். இருப்பினும், நீர் உண்ணாவிரதத்தைத் தொடங்குவதற்கு முன், மருத்துவரை அணுகவும்.
கூடுதல் குறிப்பு
நீர் விரதத்தைத் தொடங்குவதற்கு முன், நீங்கள் 2 முதல் 3 நாட்களுக்கு நல்ல ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த காலகட்டத்தில், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நீர் விரதத்தின் தீமைகள்
தண்ணீர் விரதம் நன்மைகளை மட்டுமல்ல, பல தீமைகளையும் கொண்டுள்ளது. உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைவதால், எலக்ட்ரோலைட் சமநிலையின்மை மற்றும் ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடென்ஷன் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.