குளிர்காலத்தில் மஞ்சள் பால் குடிப்பதால் கிடைக்கும் 6 நன்மைகள்!

By Devaki Jeganathan
15 Dec 2023, 14:49 IST

மஞ்சள் பால் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதை தினம் பருகுவதால் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். குளிர்காலத்தில் மஞ்சள் பால் குடிப்பதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி பார்க்கலாம்.

சளி மற்றும் இருமல்

மஞ்சள் பாலில் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இதை குடிப்பது சளி மற்றும் இருமலில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

மூட்டு வலி

மூட்டு வலி பெரும்பாலும் குளிர்காலத்தில் தொடங்கும். இந்நிலையில், மஞ்சள் பால் உட்கொள்வது மூட்டு வலியிலிருந்து விடுபடலாம்.

வயிற்றுக்கு நல்லது

மஞ்சள் கலந்த பால் தினமும் குடிப்பதால் வயிறு தொடர்பான பிரச்சனைகளான அசிடிட்டி, மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

சரும ஆரோக்கியம்

மஞ்சள் கலந்த பாலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் இருப்பதால், சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், சருமம் பளபளக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

குளிர் காலத்தில் இருமல், சளி போன்ற பிரச்சனைகள் வருவது சகஜம். இதை எதிர்த்துப் போராட, நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். இதற்கு மஞ்சள் பால் குடிப்பது நன்மை பயக்கும்.

மன அழுத்தம்

மஞ்சள் பாலில் மன அழுத்தத்தை குறைக்கும் கூறுகள் உள்ளன. எனவே இது மன அழுத்தத்தில் தங்க பால் குடிப்பது நன்மை பயக்கும்.

மஞ்சள் பால் குடிக்க சரியான நேரம்?

இதற்கு, முதலில் ஒரு கிளாஸ் பாலை சூடாக்கவும். சிறிது சூடு வந்ததும் அதனுடன் அரை டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்துக் குடிக்கவும். இத தினமும் இரவில் குடிப்பது நல்லது.