இதுக்காகவே நீங்க சூரியகாந்தி விதை சாப்பிடணும்

By Gowthami Subramani
17 Oct 2024, 15:30 IST

அன்றாட உணவில் சூரியகாந்தி விதைகளைச் சேர்த்து கூடுதல் ஊட்டச்சத்து நன்மைகளைத் தருகிறது. இதில் சூரியகாந்தி விதைகளைச் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காணலாம்

ஊட்டச்சத்துக்கள்

சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ, மெக்னீசியம் மற்றும் செலினியம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. மேலும் இதில் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், புரதங்கள் போன்றவையும் காணப்படுகிறது

எடை மேலாண்மைக்கு

சூரியகாந்தி விதைகளில் உள்ள புரதம், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு போன்றவை பசியைக் கட்டுப்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த

சூரியகாந்தி விதைகளில் பைட்டோஸ்டெரால்கள் உள்ளன. இவை உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகிறது. இதன் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவை இதய நோய் அபாயத்தைக் குறைத்து இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

சூரியகாந்தி விதைகளில் அதிக அளவு வைட்டமின் ஈ, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்றவை உள்ளது. இது வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு பங்களிக்கிறது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்து நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாக்கிறது

எலும்பு ஆரோக்கியத்திற்கு

சூரியகாந்தி விதைகளில் உள்ள மெக்னீசியம், பாஸ்பரஸ் போன்றவை ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க உதவுகிறது. இதன் வழக்கமான நுகர்வு எலும்பு தொடர்பான சிக்கல்களைத் தடுக்கவும், ஒட்டுமொத்த எலும்பு அடர்த்தியை ஆதரிக்கவும் உதவுகிறது

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த

இதன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் சருமத்தை மென்மையாக மற்றும் மிருதுவாக வைக்க உதவுகிறது. குறிப்பாக இதன் வைட்டமின் ஈ ஊட்டச்சத்துக்கள் புற ஊதா கதிர்கள் சேதத்தைத் தடுக்கவும், இளமைத் தோற்றத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது

எப்படி சாப்பிடுவது?

அன்றாட உணவில் சாலட்கள், தயிர், ஸ்மூத்திகள் அல்லது ஓட்மீல் போன்றவற்றில் சேர்க்கலாம். எனினும் இதில் கலோரிகள் அதிகம் என்பதால் மிதமான அளவில் உட்கொள்வது அவசியமாகும்