புளிப்பு ரொட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் இதோ!

By Gowthami Subramani
19 Aug 2024, 08:57 IST

புளிப்பு ரொட்டி

புளிப்பு ரொட்டி என்பது புளிக்கவைக்கப்பட்ட மாவிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு வகையான ரொட்டி ஆகும். இதில் வணிக ஈஸ்ட்டை விட, மாவை புளிப்பதற்காக இயற்கையாக நிகழும் ஈஸ்ட் மற்றும் பாக்டீரியாவைப் பயன்படுத்துகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

நொதித்தல் செயல்முறையானது பசையத்தை உடைக்கிறது. மற்ற ரொட்டிகளுடன் ஒப்பிடுகையில் புளிப்பு ரொட்டி எளிதில் செரிமானம் அடைகிறது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தத

நொதித்தல் செயல்முறையின் போது புளிப்பில் உள்ள ஆக்ஸிஜனேற்றத்தின் இருப்பு அதிகமாகிறது. இவை ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகிறது

குறைந்த கிளைசெமிக் குறியீடு

மற்ற ரொட்டிகளுடன் ஒப்பிடுகையில் புளிப்பு ரொட்டி குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. எனவே இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது

இதய நோய் அபாயம் குறைப்பு

இதன் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், குறைந்த கிளைசெமிக் இண்டெக்ஸ் போன்றவை ஆரோக்கியமான இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைப் பராமரிப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

குறைந்த பசையம்

நொதித்தல் செயல்முறையின் காரணமாக புளிப்பு ரொட்டி குறைந்த பசையம் அளவைக் கொண்டுள்ளது. இந்த லேசான பசையம் உணர்திறன் உள்ளவர்களுக்கு எளிதில் பொறுத்துக்கொள்ளுமாறு அமைகிறது

புரோபயாடிக்குகள் நிறைந்த

இந்த புளிப்பு ரொட்டியில் லாக்டிக் அமில பாக்டீரியாக்கள் உள்ளது. இவை புரோபயாடிக்குகளாக செயல்பட்டு, க்கியமான குடல் நுண்ணுயிரியை ஊக்குவிக்கிறது

நோயெதிர்ப்பு மண்டல மேம்பாட்டிற்கு

புளிப்பு ரொட்டியின் புரோபயாடிக்குகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட குடல் ஆரோக்கியம் போன்றவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இவை நோய்த்தொற்றுகளை மிகவும் திறம்பட எதிர்த்துப் போராட உதவுகிறது