ஜவ்வரிசி ஆனது சாகோ என்றும் அழைக்கப்படுகிறது. இதனை உட்கொள்வது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது
ஊட்டச்சத்துக்கள்
ஜவ்வரிசியில் கால்சியம், இரும்பு மற்றும் வைட்டமின் பி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் உள்ளது
செரிமான ஆரோக்கியத்திற்கு
இது செரிமானம் செய்ய எளிதான ஒன்றாகும். இதனை விரத காலங்களில் உட்கொள்வது செரிமான கோளாறுகளைத் தடுக்க உதவுகிறது. இது அஜீரணம் மற்றும் மலச்சிக்கலுக்கு உதவக் கூடியதாகும்
இதய நோய்
ஆய்வக சோதனை ஒன்றில் ஜவ்வரிசி உட்கொள்ளல், கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. இவ்வாறு இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
குளிரூட்டும் பண்புகள்
ஆயுர்வேதத்தில் ஜவ்வரிசியின் குளிர்ச்சித் திறனானது உடல் சூட்டைக் குறைக்க உதவும் இயற்கையான தீர்வாகக் கருதப்படுகிறது
ஆற்றல் மேம்பாட்டிற்கு
ஜவ்வரிசியில் அதிக கார்போஹைட்ரேட்டுகள் உள்ளது. இது விரைவான ஆற்றல் ஊக்கத்தை அளிக்கிறது. எனவே இது நல்ல உடற்பயிற்சிக்கு முந்தைய சிற்றுண்டிக்கு சிறந்த தேர்வாகும்
பசையமற்றது
ஜவ்வரிசி இயற்கையாகவே பசையம் இல்லாததாகும். இது பசையம் உணர்திறன் அல்லது செலியாக் நோய் உள்ளவர்களுக்கு பாதுகாப்பான தேர்வாக அமைகிறது