இந்திய வீட்டில் உள்ள அனைவரும் சமையலுக்கு நெய்யை பயன்படுத்துகின்றனர். அதே சமயம், சிலர் நெய் தடவி ரொட்டி சாப்பிட விரும்புகிறார்கள். நெய் சாப்பிடுவதால் உடல் எடை கூடும் என்றும் கூறப்படுகிறது. இது உண்மையா? என இங்கே பார்க்கலாம்.
நெய் நல்லதா?
ரொட்டியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் அதன் கிளைசெமிக் குறியீட்டை கணிசமாகக் குறைக்கிறது என்று உணவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, நெய்யுடன் ரொட்டி சாப்பிடுவது நன்மை பயக்கும்.
எடை குறைக்கும்
ரொட்டியை நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறையும். கூடுதலாக, இந்த கலவை இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதை தடுக்கிறது.
உடலுக்கு நல்லது
ரொட்டியில் நெய் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது முற்றிலும் தவறு. நிபுணர்களின் கூற்றுப்படி, இதை சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
ஹார்மோன் சமநிலை
நெய்யுடன் ரொட்டி சாப்பிடுவது ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், ஆரோக்கியமான கொலஸ்ட்ராலை பராமரிக்கவும் உதவுகிறது. மேலும், நெய் சாப்பிட்டால் நீண்ட நேரம் வயிறு நிறைந்ததாக இருக்கும்.
குறைவாக சாப்பிடவும்
நெய்யுடன் ரொட்டியைச் சாப்பிடுவதன் மூலம், நீங்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். இது எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இந்த கலவையை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்க இதுவே காரணம்.
செரிமானத்திற்கு நல்லது
எடை குறைப்புடன், செரிமான பிரச்சனைகள் இருந்தாலும், நெய்யுடன் ரொட்டி சாப்பிடுவது நன்மை பயக்கும்.
எவ்வளவு சாப்பிடனும்?
எதையும் சரியான அளவில் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அதேபோல, நெய்யையும் குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். அதிகமாக சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும்.