கல் உப்பு பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

By Karthick M
25 Oct 2024, 20:29 IST

பெரும்பாலான மக்கள் வீட்டில் தூள் உப்பு, கல் உப்பு என இரண்டை பயன்படுத்துகின்றனர். இதில் சிறந்தவையான கல் உப்பை பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.

உடலை கட்டுக்கோப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க சோடியம் அவசியம், இது உப்பு சாப்பிடுவதால் கிடைக்கும். கல் உப்பு சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையை பார்க்கலாம்.

சாதாரண உப்பை விட கல் உப்பில் ஏராளமாக தாதுக்கள் உள்ளன. ஆரோக்கியமாக இருக்க இது உதவியாக இருக்கும்.

சோடியத்துடன், பொட்டாசியம், இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆகியவை கல் உப்பில் காணப்படுகின்றன. இது பல உடல்நலப் பிரச்சனையை போக்க உதவுகிறது.

கல் உப்பு உங்கள் உணவின் சுவையை அதிகரிக்கிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது. தினசரி பயன்படுத்தினால் வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

கோடையில் கல் உப்பை உணவில் பயன்படுத்தினால், உடலுக்கு குளிர்ச்சி தரும். கல் உப்பு கண்களுக்கு நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.