இந்துப்பில் சோடியம் குளோரைடு, கால்சியம், மக்னீசியம், இரும்பு, சல்பர், ஆக்ஸிஜன், கோபால்ட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் பல்வேறு நன்மைகளைத் தருகிறது
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க
இந்துப்பில் வைட்டமின் கே உள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்தவும், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இது எலும்பு வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது
தசைபிடிப்பு நீங்க
உடலில் பொட்டாசியம் குறைபாட்டால் தசைபிடிப்பு பிரச்சனை ஏற்படலாம். இந்துப்பை எடுத்துக் கொள்வது பொட்டாசியம் குறைபாட்டை சமன் செய்து தசைப்பிடிப்பைத் தவிர்க்கிறது
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த
இந்துப்பில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், சமநிலையில் வைக்கவும் உதவுகிறது
சரும ஆரோக்கியத்திற்கு
இந்துப்பு சருமத்தில் உள்ள எண்ணெய்த் தன்மையைத் தடுப்பதுடன், முகப்பருவைக் குறைக்கிறது. முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி, பொலிவான சருமத்தைத் தருகிறது
மன அழுத்தத்திற்கு
வெதுவெதுப்பான நீரில் இந்துப்பைக் கலந்து குளிப்பது மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் மூளை செயல்பாட்டை மேம்படுத்துகிறது
வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க
இந்துப்பு உடல் செயல்பாட்டை மேம்படுத்தவும், உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது உட்புற உடல் உறுப்புகளுக்கு குளிர்ச்சியான விளைவைத் தருகிறது
தொன்டைப்புண் சிகிச்சைக்கு
உப்பு நீர் வாய் கொப்பளிப்பது தொண்டை வலிக்கு சிறந்த வீட்டு வைத்தியமாகும். இது நுரையீரல் திறனை அதிகரிக்க உதவுவதுடன்,
செரிமானத்தை மேம்படுத்த
நெஞ்செரிச்சல், வீக்கம், மலச்சிக்கல், வயிற்று வலி போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு இந்துப்பு சிறந்த தேர்வாகும். இதிலுள்ள தாதுக்கள், வைட்டமின்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது