டீயை மீண்டும் சூடுபடுத்தி குடிப்பது இவ்வளவு ஆபத்தா?

By Devaki Jeganathan
08 Dec 2024, 23:49 IST

பெரும்பாலும் மக்கள் தங்கள் நாளை தேநீருடன் தொடங்குகிறார்கள். நம்மில் பலர் டீயை மொத்தமாக போட்டு வைத்து அவ்வப்போது சூடு செய்து குடிப்போம். ஆனால், இது ஆரோக்கியத்திற்கு ஆபத்து என்பது உங்களுக்கு தெரியுமா? இதன் தீமைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

டீயை சூடுபடுத்தி குடிப்பது ஆபத்தா?

டீயை 4 மணிநேரம் அல்லது அதற்கும் மேலாக வைத்து மீண்டும் சூடாக்கி குடிப்பது பல உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். டீயை சமைத்த 1 மணிநேரத்திற்குள் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ஊட்டச்சத்து குறைபாடு

தேநீரை மீண்டும் சூடாக்கி குடிப்பதால், அதில் உள்ள சத்துக்களை அழித்து, அதில் பாக்டீரியாக்கள் வளரும் வாய்ப்பும் அதிகரிக்கும். இந்நிலையில், தேநீரை மீண்டும் சூடாக்கி குடிப்பதைத் தவிர்க்கவும்.

குடல் சேதம்

டீயை மீண்டும் சூடுபடுத்தி குடிப்பது மக்களின் குடல் மற்றும் செரிமானத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இதனால், தொற்று, வாயு, அமிலத்தன்மை போன்ற பிரச்னைகளை மக்கள் சந்திக்க நேரிடும்.

உணவு விஷம்

பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் டீயை மீண்டும் சூடுபடுத்தி குடிப்பதை தவிர்க்க வேண்டும். இதில், உள்ள பாக்டீரியாக்கள் உணவு விஷத்தை ஏற்படுத்தும்.

வாந்தி பிரச்சனை

டீயை மீண்டும் சூடுபடுத்தி குடித்தால் குமட்டல், வாந்தி, தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும். எனவே, இதன் நுகர்வை தவிர்க்கவும்.

புற்றுநோய் ஆபத்து

டீயை மீண்டும் சூடுபடுத்திய பிறகு குடிப்பதால் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்கள் வரும் அபாயமும் உள்ளது. இந்நிலையில், தேநீரை மீண்டும் சூடாக்கி குடிப்பதைத் தவிர்க்கவும்.

இரைப்பை குடல் அழற்சி

டீயை மீண்டும் சூடுபடுத்திய பிறகு குடிப்பதால் வயிறு மற்றும் குடல் தொற்றுகள் ஏற்படலாம். இதன் காரணமாக இரைப்பை குடல் அழற்சி ஏற்படுகிறது. இது குடலில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது.