தயிரில் வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் என்னவாகும்?

By Devaki Jeganathan
13 Nov 2024, 11:30 IST

வெங்காயத்தில் தயிர் கலந்து சாப்பிட பலர் விரும்புவார்கள். இந்நிலையில், தயிர் மற்றும் வெங்காயத்தை சாப்பிடுவது உடலில் என்ன விளைவை ஏற்படுத்தும் என்ற கேள்வி நம்மில் பலருக்கும் இருக்கும். வெங்காயம் பச்சடி சாப்பிடுவதன் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

தயிர் வெங்காயம் நல்லதா?

தயிர் மற்றும் வெங்காயத்தின் கலவை உடலுக்கு நன்மை பயக்கும். தயிர் மற்றும் வெங்காயம் இரண்டிலும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த கலவை உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதன் பலன்கள் பற்றி பார்க்கலாம்.

சிறந்த செரிமானம்

செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. தயிர் மற்றும் வெங்காயம் சாப்பிடுவது குடலுக்கு நன்மை பயக்கும். இதனால், வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தி

தயிர் மற்றும் வெங்காயம் சாப்பிடுவது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சத்துக்கள் இரண்டிலும் உள்ளது.

பிறப்புறுப்பு நோய்

தயிர் மற்றும் வெங்காயம் சாப்பிடுவதால் பிறப்புறுப்பு தொற்று பிரச்சனையை தடுக்கலாம். அதனால்தான் பெண்கள் தயிர் மற்றும் வெங்காயம் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தோலுக்கு நல்லது

தயிர் மற்றும் வெங்காயம் சாப்பிடுவது சருமத்திற்கு நன்மை பயக்கும். இதில், உள்ள பண்புகள் உங்கள் சருமத்தை மேம்படுத்துவதோடு பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும்.

இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு தயிர் மற்றும் வெங்காயம் சாப்பிடுவது நல்லது. மற்றவர்களை விட தயிர் சாப்பிடுபவர்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை மிகவும் குறைவு.