ஜாதிக்காய் பால் அருந்துவதில் இத்தனை நன்மைகள் இருக்கா?

By Gowthami Subramani
19 Jun 2024, 13:30 IST

ஜாதிக்காய் மசாலா கலந்த பால் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் ஜாதிக்காய் கலந்த பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

இதய ஆரோக்கியத்திற்கு

ஜாதிக்காய் பால் அருந்துவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் சத்துக்கள் அதிக கொலஸ்ட்ரால் அளவைத் தடுக்க உதவுகிறது

செரிமான ஆரோக்கியத்திற்கு

ஜாதிக்காய் பால் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது வாயு, வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு உதவுகிறது

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

ஜாதிக்காயில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இவை உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது

வலியிலிருந்து நிவாரணம் பெற

ஜாதிக்காயில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இது தசைவலி மற்றும் மூட்டுவலி போன்றவற்றால் ஏற்படும் வலி மற்றும் அசௌகரியத்தைக் குறைக்க உதவுகிறது. இது ஒரு இயற்கை வலி நிவாரணியாக செயல்பட்டு, வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது

மன அமைதிக்கு

ஜாதிக்காயில் நிறைந்த அமைதியான பண்புகள் மனக்கவலை மற்றும் அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இது மன அழுத்த ஹார்மோன் அளவைக் குறைப்பதுடன், அமைதியான உணர்வை ஊக்குவிக்கிறது

நல்ல தூக்கத்திற்கு

ஜாதிக்காயில் எலிமிசின்மற்றும் மிரிஸ்டிசின் போன்ற இயற்கையான சேர்மங்கள் நிறைந்துள்ளது. இது மயக்கம் மற்றும் நிதானமான விளைவுகளைகத் தருகிறது. இதை பாலுடன் இணைப்பது தூக்கமின்மையை எதிர்த்து, நல்ல ஆரோக்கியமான தூக்கத்தைத் தருகிறது

ஜாதிக்காய் பால் செய்முறை

முதலில் 2 கப் பாலை சூடாக்கி, அதில் அரை டீஸ்பூன் ஜாதிக்காய், 1/2 டீஸ்பூன் தேன் அல்லது சுவைக்கு சர்க்கரை சேர்க்கலாம். இதை நன்கு கிளறி, பானத்தை ஒரு குவளையில் ஊற்றி சூடாக குடிக்க வேண்டும்