சிறுநீரக ஆரோக்கியத்தில் மக்னீசியம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது சிறுநீரகம் தொடர்பான சிக்கல்களைத் தடுக்கவும், ஒட்டுமொத்த செயல்பாட்டை ஆதரிக்கவும் உதவுகிறது
இரத்த அழுத்தக் கட்டுப்பாட்டை ஆதரிக்க
மக்னீசியம் சப்ளிமெண்ட்ஸ் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், சிறுநீரகங்களில் அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது
சிறுநீரகக் கற்களைத் தடுக்க
மக்னீசியம் உட்கொள்ளல் கால்சியம் ஆக்சலேட் குவிப்பைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கலாம்
வீக்கத்தைக் குறைக்க
மெக்னீசியத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது சிறுநீரக செயல்பாட்டைப் பாதுகாக்க உதவுகிறது
எலக்ட்ரோலைட் சமநிலையைப் பராமரிக்க
மெக்னீசியம் உட்கொள்ளல் கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களை ஒழுங்குபடுத்துகிறது. இது ஒட்டுமொத்த சிறுநீரக செயல்பாட்டை ஆதரிக்கிறது