ஜாதிக்காயை பாலில் கலந்து குடிப்பது இவ்வளவு நல்லதா?

By Devaki Jeganathan
01 Mar 2024, 16:17 IST

ஜாதிக்காய் ஒவ்வொரு வீட்டு சமையலறையிலும் காணப்படும் மசாலாப் பொருள். இது இன்றும் நாட்டு மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது. இதை உட்கொள்வது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. அதே சமயம், பாலில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடி கலந்து குடித்து வந்தால் பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஜாதிக்காயின் பண்புகள்

இதில் வைட்டமின்கள், தாமிரம், பாஸ்பரஸ், மெக்னீசியம், இரும்புச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

பால் பண்புகள்

இதில் புரதம், கால்சியம், வைட்டமின் ஏ, டி, கே மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. இது தவிர பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் பாலில் உள்ளன.

பால் மற்றும் ஜாதிக்காய்

ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான பாலில் ஒரு சிட்டிகை ஜாதிக்காய் பொடியை கலந்து குடித்து வந்தால், அது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இருப்பினும், ஜாதிக்காயை மிகக் குறைந்த அளவில் மட்டுமே உட்கொள்ள வேண்டும்.

மூட்டு வலியிலிருந்து நிவாரணம்

ஜாதிக்காய் சேர்த்து பால் குடித்து வந்தால் மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். கூடுதலாக, இது தசை வலியைக் குறைக்க உதவுகிறது.

வயிற்றுக்கு நல்லது

இந்த பாலை தொடர்ந்து உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. தவிர, வயிறு தொடர்பான பிரச்சனைகளும் குறையும்.

சிறந்த தூக்கம்

தூக்கமின்மை இருந்தால் ஜாதிக்காய் கலந்த பாலை அருந்தலாம். இதனால் இரவில் நிம்மதியான தூக்கம் கிடைக்கும். மேலும், தூக்கத்தின் தரம் மேம்படும்.

எப்படி உட்கொள்ள வேண்டும்?

இதற்கு முதலில் ஒரு கிளாஸ் பாலை லேசாக சூடாக்கவும். இப்போது ஒரு சிட்டிகை ஜாதிக்காய் தூள் அல்லது ஜாதிக்காயை சிறிது அரைத்து கலக்கவும். இந்த கலவையை ஒரு நாளைக்கு ஒரு முறை சாப்பிடுங்கள்.