சர்க்கரையில் கலோரிகள் மிக அதிகம். இது பலருக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
நீரிழிவு நோய்
சர்க்கரை நோயாளிகள் பதப்படுத்தப்பட்ட சர்க்கரைக்கு பதிலாக பனை வெல்லம் மிதமான அளவு பயன்படுத்தலாம். இது இரத்த சர்க்கரை அளவை திடீரென அதிகரிக்காது.
இரத்த சோகையை குணமாக்கும்
இரத்த சோகையை கட்டுப்படுத்தி ஹீமோகுளோபின் அளவை பராமரிக்க சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தை பயன்படுத்தலாம்.
எடை இழப்பை கட்டுப்படுத்தும்
சர்க்கரை உடல் எடை அதிகரிப்புக்கு பெரும் பங்கு வகிக்கிறது. அத்தகைய நிலையில் சர்க்கரையுடன் ஒப்பிடும் போது வெல்லம் ஆகச்சிறந்த தேர்வாக இருக்கிறது.
காலநிலை மாற்றம்
குளிர் அல்லது கோடை காலம் என எந்த காலமாக இருப்பினும், அனைத்து பருவகால சிரமங்களையும் சமாளிக்க வெல்லம் உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்தும்
நல்ல குடல் ஆரோக்கியத்துடன் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் வெல்லம் உதவுகிறது. இது மலச்சிக்கல், அஜீரணம், குமட்டல் போன்ற செரிமான பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.