தினமும் லிப்ஸ்டிக் போடுவது எவ்வளவு ஆபத்து தெரியுமா?

By Devaki Jeganathan
22 Apr 2024, 13:42 IST

பல பெண்கள் முகத்தின் அழகை அதிகரிக்க தினமும் உதட்டுச்சாயம் அதாவது லிப்ஸ்டிக் பயன்படுத்துவோம். ஆனால், காய் தினமும் உதடுகளில் தடவுவது உங்கள் உடலிலும் தீங்கு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? தினமும் லிப்ஸ்டிக் போடுவதால் ஏற்படும் தீமைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

உலர்ந்த உதடுகள்

தினமும் லிப்ஸ்டிக் பயன்படுத்துவதால் உதடுகள் வெடிக்கும். மேலும், இது மிகவும் உலர்ந்ததாக இருக்கும். ஈரப்பதம் இல்லாமல் அதைப் பயன்படுத்துவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

ஒவ்வாமை

லிப்ஸ்டிக்கில் சரும அலர்ஜியை ஏற்படுத்தும் பல பொருட்கள் உள்ளன. இது எரிச்சல், வீக்கம், சிவத்தல் அல்லது அரிப்பு ஏற்படலாம்.

உதடு கருமை

நீண்ட நேரம் உதடுகளில் நேரடியாக லிப்ஸ்டிக் தடவினால் உங்கள் உதடுகளின் இயற்கையான நிறம் மறைந்துவிடும். மேலும், உதடுகள் கருமையாக தோன்றலாம்.

தீங்கு விளைவிக்கும் பொருட்கள்

லிப்ஸ்டிக்கில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பல பொருட்கள் உள்ளன. இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்.

மூளையில் விளைவு

உங்கள் உதடுகளில் தொடர்ந்து உதட்டுச்சாயம் பூசுவது உங்கள் மூளையில் மோசமான விளைவை ஏற்படுத்தும். இது கவனக்குறைவு மற்றும் பலவீனமான நினைவாற்றல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

வயிற்றுக்கு மோசமானது

உதடுகளில் உதட்டுச்சாயம் பூசுவதன் மூலம், நாக்கு அதை பல முறை தொடுகிறது. இதனால் பல தீங்கு விளைவிக்கும் பொருட்கள் நம் வயிற்றில் நுழைகின்றன. இதனால் தொற்று பிரச்சனை ஏற்படலாம்.

தோல் துளை அடைப்பு

தினமும் உதடுகளில் நேரடியாக உதட்டுச்சாயம் பூசுவது உங்கள் சரும துளைகளை அடைத்துவிடும். இந்நிலையில், மாய்ஸ்சரைசர் இல்லாமல் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.