நம்மில் பலர் உடல் எடையை குறைக்க தினமும் கிரீன் டீ குடிப்போம். இது உடலை ஆரோக்கியமாக வைப்பதுடன் நம்மை புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்கும். அளவுக்கு அதிகமாகவோ அல்லது அடிக்கடி கிரீன் டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள் பற்றி பார்க்கலாம்.
இரத்த சோகை
கிரீன் டீயை அளவுக்கு அதிகமாக பருகுவதால் உடலில் இரும்பு சத்து குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இதனால், இரத்த சோகை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு கிரீன் டீ வழிவகுக்கிறது.
எலும்பு தேய்மானம்
அளவுக்கு அதிகமாக கிரீன் டீ பருகுவது பொட்டாசியம், கால்சியம் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. எனவே, அதிகமாக கிரீன் டீ குடிப்பது, உடல் எலும்புகளின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
தசை பிடிப்பு
அளவுக்கு அதிகமான கிரீன் டீயின் நுகர்வு, இரத்தத்தில் பொட்டாசியத்தின் அளவை குறைக்கும். பொட்டாசியத்தின் குறைபாடு, உடல் சதைகளின் ஆரோக்கியத்தை பாதித்து சதை பிடிப்பு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
கல்லீரல்
கிரீன் டீ கல்லீரலில் சேரும் கழிவுகளை வெளியேற்றி அதை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இதன் அதிகப்படியான நுகர்வு, எதிர் விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
தலைசுற்றல்
ஒரு நாளுக்கு 400 mg-க்கு அதிக அளவு கிரீன் டீ எடுத்துக்கொள்வது உடலில் காஃபின் உள்ளடக்கத்தை அதிகரிப்பதோடு தலைசுற்றல், வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
தைராய்டு
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் கிரீன் டீ குடிப்பது மிகவும் நல்லது. ஆனால், அளவுக்கு அதிகமாக உட்கொள்வது, தைராய்டு அபாயத்தை அதிகரிக்கும்.