சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது சரியா? தவறா?

By Karthick M
20 Apr 2024, 22:43 IST

சாப்பிடும் போது எப்போது தண்ணீர் குடிக்கலாம்

உணவு சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கும் பழக்கம் பலரிடம் இருக்கும். இந்த பழக்கம் உங்களுக்கு இருக்கிறது என்றால் இது சரியா, தவறா என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நிபுணர் கருத்து

உணவு சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்து எப்போதும் தண்ணீர் குடிக்க வேண்டும். உணவு உண்டவுடன் தண்ணீர் குடிப்பது செரிமான அமைப்பில் பிரச்சனையை ஏற்படுத்தும். இதன் காரணமாக அமிலத்தன்மை மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனை ஏற்படுத்தும்.

எடை அதிகரிப்பு

உணவு உண்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் உடல் எடை அதிகரிக்கும். நீங்கள் உடல் பருமனை தவிர்க்க விரும்பினால் உணவு சாப்பிட்ட சில நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கவும்.

இரத்த சர்க்கரை அளவு

உணவு உண்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் உடலில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கும். இதன் காரணமாக சர்க்கரை நோய் அபாயமும் அதிகரிக்கும்.

வாயு பிரச்சனை

சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிப்பதால் உணவு சரியாக ஜீரணமாகாது. மேலும் அஜீரணம், வாயு மற்றும் மலச்சிக்கல் ஏற்படும்.

அல்சர் மற்றும் நெஞ்செரிச்சல்

உணவு உண்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் உடலில் என்சைம்கள் பற்றாக்குறை ஏற்பட்டு நெஞ்செரிச்சல், அல்சர் போன்ற பிரச்சனையை ஏற்படுத்தும்.