சூரியகாந்தி விதைகளை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இதில் தினமும் சூரியகாந்தி விதை தரும் நன்மைகளைக் காணலாம்
இதய ஆரோக்கியத்திற்கு
சூரியகாந்தி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளது. இவை இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்க
இந்த விதைகளில் துத்தநாகம் மற்றும் செலினியம் நிறைந்துள்ளது. இவை நோயெதிர்ப்புச் சக்தியை பலப்படுத்துகிறது
அழற்சியை எதிர்த்துப் போராட
சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ, பிளவனாய்டுகள் மற்றும் தாவர கலவைகள் நிறைந்துள்ளது. இவை குறுகிய கால மற்றும் நாள்பட்ட அழற்சியைக் குறைக்க உதவுகிறது
ஆற்றலை அதிகரிக்க
இந்த விதைகளில் வைட்டமின் பி1 மற்றும் செலினியம் போன்றவை உள்ளது. இவை ஆக்ஸிஜன் விநியோகத்தை மேம்படுத்தவும், உணவை ஆற்றலாக மாற்றவும் உதவுகிறது. இது நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது
எப்படி சாப்பிடுவது?
இதை பச்சையாகவோ அல்லது வறுத்தோ, தயிர், சாலட்கள் அல்லது ஸ்மூத்திகளில் சேர்த்து அருந்தலாம். இது ஆரோக்கியமான தேர்வாக அமைகிறது