உடல் ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் மிகவும் அவசியம். தண்ணீர் பற்றாக்குறை உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அதேபோல ஆயுர்வேதத்திலும் தண்ணீர் குடிப்பதற்கு பல விதிகள் கூறப்பட்டுள்ளன. பலர் சாப்பிடும் போது தண்ணீர் குடிக்கிறார்கள். இப்படி செய்வது தவறானது. உணவு சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும் தெரியுமா?
உணவுடன் தண்ணீர் குடிப்பதன் தீமைகள்
சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடித்தால், செரிமானத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்கின்றனர் நிபுணர்கள். இதனால் உணவு சரியாக ஜீரணமாகாது.
சாப்பிட்ட பின் எப்போது தண்ணீர் குடிக்கனும்?
குறைந்தது 30 நிமிடங்களாவது அதாவது உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் அல்லது பின் தண்ணீர் குடிக்கலாம். தண்ணீர் குடிக்க இதுவே சரியான நேரமாக கருதப்படுகிறது.
எப்படி தண்ணீர் குடிக்க வேண்டும்?
சாப்பிட்டு 30 நிமிடம் கழித்து தண்ணீர் குடித்தால், குளிர்ந்த நீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதனால் நீங்கள் அறை வெப்பநிலையில் தண்ணீர் குடிக்க வேண்டும்.
இஞ்சி தண்ணீர் குடிக்கவும்
நீங்கள் விரும்பினால், இஞ்சியை தண்ணீரில் போட்டு, இந்த தண்ணீரை குடிக்கலாம். இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் உணவு எளிதில் ஜீரணமாகும்.
சிறந்த செரிமானம்
ஆயுர்வேதத்தின் படி, உணவை சாப்பிட்ட 30 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடித்தால், அது உங்கள் செரிமான சக்தியை மேம்படுத்தும்.
உடல் பருமன் அதிகரிக்கும்
உணவுடன் அல்லது உடனே தண்ணீர் குடிப்பவர்களுக்கு உடல் பருமன் அதிகரிக்கத் தொடங்குகிறது. உணவுடன் தண்ணீர் குடிப்பதால், அதிகப்படியான உணவு உண்பதற்கு பலியாகலாம். மேலும், அது அடிக்கடி பசியை உண்டாக்குகிறது, இதனால் எடை கூடுகிறது.
வீக்கம் ஏற்படலாம்
உணவு உண்ட உடனே தண்ணீர் குடிப்பதால் வயிற்று உப்புசம் பிரச்சனை ஏற்படுவது சகஜம். இதனால், வயிற்றுவலி, வாய்வு போன்ற பிரச்சனைகள் வரலாம்.