பாலுடன் உலர் பழங்களை இணைத்து உட்கொள்வதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இதன் நன்மைகள் குறித்து இங்கே விரிவாக காண்போம்.
எலும்புகள் வலுவாகும்
பாலில் கால்சியம் உள்ளது, மேலும் உலர் பழங்களில் நல்ல அளவு கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. இந்த சத்துக்கள் அனைத்தும் எலும்பு பலவீனத்தை நீக்கும்.
செரிமானம் மேம்படும்
உலர் பழங்களை பாலில் கலந்து சாப்பிட்டால் செரிமானம் மேம்படும். தினமும் பால் மற்றும் உலர் பழங்களை உட்கொள்வதால் வாயு, மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மை ஆகியவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
தூக்கமின்மை நீங்கும்
மன அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாக, இரவு வெகுநேரம் வரை தூங்க முடியாது. பால் மற்றும் உலர் பழங்களை ஒன்றாக எடுத்துக்கொள்வது மன அழுத்தத்தை குறைக்கிறது. இதனால் நாள் முழுவதும் சோர்வு நீங்கி உறங்க உதவுகிறது.
எடை அதிகரிக்கும்
ஒல்லியாகவும், பலவீனமாகவும் இருந்தால் உலர் பழங்களை பாலில் கலந்து சாப்பிடலாம். பால் மற்றும் உலர் பழங்களை ஒன்றாக சேர்த்து சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க உதவும்.
ஆற்றல் அதிகரிக்கும்
பால் புரதத்தின் நல்ல மூலமாகும். தினமும் பால் மற்றும் உலர் பழங்களை ஒன்றாக எடுத்துக் கொண்டால், அது நாள் முழுவதும் ஆற்றலைத் தரும்.