வெந்நீர் அருந்துவது உடலை நீரேற்றத்துடன் வைக்க உதவுகிறது. எனினும் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்குமா என்பது அனைவருக்கும் சந்தேகம் எழும்
என்ன விளைவு
தினமும் காலையில் வெந்நீர் அருந்துவது உடலுக்கு நன்மை, தீமை இரண்டையும் தருகிறது. இதில் வெறும் வயிற்றில் வெந்நீர் அருந்துவது என்ன விளைவுகளைத் தரும் என்பதைக் காண்போம்
வெந்நீரின் நன்மைகள்
வெதுவெதுப்பான நீரை காலை நேரத்தில் அருந்துவது மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் தருகிறது. மேலும் இது எடை இழப்பு, செரிமான அமைப்பு போன்ற பல்வேறு நன்மைகளைத் தருகிறது
சிறுநீரகம்
உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்ற சிறுநீரகம் முக்கியமானதாக செயல்படுகிறது. இது உடலில் இருந்து நச்சுக்களை அகற்ற உதவுகிறது. வெந்நீர் குடிப்பதால் நீரிழப்பு ஏற்படலாம். இது சிறுநீரகத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்
தூக்கமின்மை
தேவைக்கு அதிகமாக வெந்நீர் அருந்துவது தூக்கமின்மை பிரச்சனையை உண்டாக்கலாம். இரத்த அணுக்கள் மீதான அழுத்தத்தை அதிகரித்து தூக்கமின்மையை உண்டாக்கலாம்