நம்மில் பலர் காலையில் நேரமின்மை காரணமாக மாலை அல்லது இரவில் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்வோம். அப்படி, இரவில் உடற்பயிற்சி செய்வதினால் உண்டாகும் நன்மை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தசை வலிமை
மாலை மற்றும் இரவு நேரங்களில் தசையின் உணர்திறன் அதிகமாக இருக்கும். இந்நிலையில், இரவில் உடற்பயிற்சி செய்வது, தசைகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.
சிறப்பு கவனம்
காலையில் எழுந்து உடற்பயிற்சி செய்யும் போது, நிலுவையில் உள்ள வேலைகள் குறித்த சிந்தனையை அதிகரிக்கும். இதனால் கவனச் சிதறல் ஏற்படும். இதுவே, மாலை மற்றும் இரவு நேரங்களில் உடற்பயிற்சி செய்யும் போது முழுக் கவனத்துடன் செய்ய முடியும்.
உடல் எடை குறையும்
இரவில் உடற்பயிற்சி செய்வது எளிதாக உடல் எடையை குறைக்க உதவுகிறது. நல்ல தூக்கம், மன அழுத்தம் குறைதல் இவற்றால் உங்கள் உடல் எடையை நீங்கள் எளிதாக குறைக்கலாம்.
ஆற்றல் இழப்பு
காலையில் உடற்பயிற்சி செய்யும் போது ஏற்படும் ஆற்றல் இழப்பை விட, மாலை - இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்யும் போது ஆற்றல் இழப்பு குறைவாக இருக்கும். அந்த வகையில் கார்டியோ மற்றும் வலிமை பயிற்சிக்கு இரவு நேரமே சிறந்தது.
நல்ல தூக்கம்
இரவு நேர உடற்பயிற்சி செய்வது உங்களுக்கு உற்சாகம் தரும். இதனால், ஆழ்ந்த மற்றும் நீண்ட நேரம் தூக்கத்தை நீங்கள் பெற முடியும். எனவே இரவு நேர உடற்பயிற்சி உங்களுக்கு நிம்மதியான தூக்கத்தை தரும்.
மன அழுத்தம்
இரவு நேர உடற்பயிற்சி செய்யும் போது மன அழுத்தம் குறைந்து மனநிலையை சீராக வைக்கும் எண்டோர்பின்கள் அதிகம் சுரக்கின்றன. இது மூளையில் நல்ல இராசயனங்களை உற்பத்தி செய்து மன அழுத்த பிரச்சனைகளை நீக்கும்.
ஊட்டச்சத்து அதிகரிப்பு
இரவில் உடற்பயிற்சி செய்த பின் தூங்க செல்வதினால், இரவு தூங்கும் போது புரதம் சிறப்பாக உறிஞ்சப்படுகிறது. இது தசைகளின் வலிமையை அதிகரிக்க உதவுகிறது.