கருஞ்சீரக எண்ணெய் எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

By Gowthami Subramani
22 Dec 2024, 23:18 IST

கலோஞ்சி எண்ணெய் கருஞ்சீரக எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது. இது அதன் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றதாகும். இதில் கலோஞ்சி எண்ணெயைச் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்

செரிமான ஆரோக்கியத்திற்கு

கலோஞ்சி எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது. இதன் மூலம் ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது

வீக்கத்தைக் குறைப்பதற்கு

இந்த எண்ணெயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் கீல்வாதம் போன்ற நிலைமைகளைப் போக்க உதவுகிறது

இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்த

கலோஞ்சி எண்ணெய் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதகக் கூறப்படுகிறது. இது நீரிழிவு நோயை நிர்வகிப்பவர்களுக்கு மிகுந்த நன்மை பயக்கும்

சுவாச ஆரோக்கியத்தை மேம்படுத்த

கலோஞ்சி எண்ணெயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆஸ்துமாவின் அறிகுறிகளைக் குறைக்கவும், ஒட்டுமொத்த சுவாச செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க

இதில் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், பல்வேறு நோய்த்தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்கவும் உதவுகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

கலோஞ்சி எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இவை முகப்பரு, அரிக்கும் தோலழற்சி மற்றும் வறண்ட சருமத்திற்கு சிகிச்சையளிப்பதுடன், மென்மையான மற்றும் தெளிவான சருமத்தைத் தருகிறது

முடி வளர்ச்சிக்கு

இதில் உள்ள வைட்டமின்கள் மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் போன்றவை முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. மேலும் கலோஞ்சி எண்ணெய் உச்சந்தலையை ஊட்டமளிக்கவும், முடி உதிர்வைக் குறைக்கவும், ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது