இரவில் தலையணை இல்லாமல் தூங்குவதன் நன்மைகள்!

By Devaki Jeganathan
24 Jun 2024, 12:30 IST

நாம் அனைவரும் தூங்கும் போது தலையணை பயன்படுத்துகிறோம். ஆனால், சிலர் தலையணை இல்லாமல் தூங்க விரும்புகிறார்கள். இரவில் தலையணை இல்லாமல் தூங்குவது உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இரவில் தலையணை இல்லாமல் தூங்கினால் என்ன நடக்கும் என்று இங்கே பார்க்கலாம்.

முதுகெலும்புக்கு நல்லது

தலையணை இல்லாமல் தூங்குவது மிகவும் நன்மை பயக்கும். ஏனெனில், இது உங்கள் முதுகெலும்பு மற்றும் தலையின் நிலையை நேராக வைத்திருக்கிறது. தலையணை இல்லாமல் தூங்கினால், நபரின் கழுத்து முதுகுத்தண்டின் திசையில் இருக்கும்.

சுரும சுருக்கம் நீங்கும்

தலையணையுடன் தூங்குவது முகத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் தலையணையில் இருக்கும் தூசி, அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் சருமத் துளைகளில் உறிஞ்சப்பட்டு சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, தலையணை இல்லாமல் தூங்குவதால் சுருக்கங்கள் ஏற்படாது.

மன ஆரோக்கியம் மேம்படும்

தலையணை இல்லாமல் தூங்குவது தலைப் பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. உங்கள் மன ஆரோக்கியத்திலும் இதன் மூலம் பலன்களைப் பெறுவீர்கள். தலையணை இல்லாமல் தூங்குபவர்களுக்கு நல்ல நினைவாற்றலும், மன சமநிலையும் இருக்கும்.

தூக்கமின்மை

தலையணை இல்லாமல் தூங்குவது மன அழுத்தத்தைக் குறைத்து ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகுக்கும். இது தரமான தூக்கத்தைப் பெற உதவும்.

முதுகு வலி நிவாரணம்

அடிக்கடி முதுகுவலி இருப்பவர்கள் தலையணை இல்லாமல் தூங்க வேண்டும். இப்படி தூங்கினால் முதுகு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

சீரான இரத்த ஓட்டம்

தலையணையுடன் தூங்குவது உங்கள் தலையை உங்கள் இதயத்தை விட உயரமாக வைத்திருக்கும். இந்நிலையில், உடலின் இரத்த ஓட்டம் நிலை மோசமடைகிறது. எனவே, தலையணை இல்லாமல் தூங்குவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

மோசமான உடல் நிலை

இரவில் தலையணை இல்லாமல் தூங்குவது உடல் நிலையை மோசமாக்கும். இதனால் கழுத்து பின்னோக்கி வளைந்து தோள்பட்டை முன்னோக்கி வளைந்துவிடும்.