கோடை காலத்தில் நம்மில் பலர் இரவு தூங்குவதற்கு முன் குளிக்க விரும்புவோம். அப்படி குளிப்பது நல்லதா?. இரவில் குளிக்க சிறந்த நேரம் எது? தூங்குவதற்கு எவ்வளவு நேரத்திற்கு முன் குளிக்க வேண்டும்? என இங்கே பார்க்கலாம்.
தூங்குவதற்கு முன் எப்போது குளிக்க வேண்டும்?
இரவில் குளித்த உடனே தூங்கச் செல்லக்கூடாது. இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே, நீங்கள் இரவில் தூங்குவதற்கு குறைந்தது 1 மணிநேரத்திற்கு முன் குளிக்கலாம். இரவில் குளிப்பதால் பல நன்மைகள் கிடைக்கும்.
எடை குறைக்க உதவும்
இரவில் குளிப்பதன் மூலம் கூடுதல் கலோரிகளை எரிக்கலாம். இதனால் உடலில் தேங்கியுள்ள கொழுப்பை குறைக்கலாம். இருப்பினும், இதற்காக நீங்கள் சாதாரண அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
சருமத்திற்கு நல்லது
இரவில் குளிப்பதால் சருமத்தில் படிந்திருக்கும் வியர்வை, அழுக்கு மற்றும் பாக்டீரியாக்கள் நீங்கும். இதன் மூலம், முகத்தில் உள்ள பருக்கள், முகப்பரு மற்றும் புள்ளிகளையும் போக்கலாம்.
சோர்வு நீங்கும்
நீங்கள் சோர்வாக உணர்ந்தால், இரவில் குளிப்பது மிகவும் நல்லது. பலர் நாள் முழுவதும் மடிக்கணினி அல்லது கணினி திரையின் முன் அமர்ந்து வேலை செய்கிறார்கள். இது சில நேரங்களில் தூக்கமின்மை பிரச்சனைக்கு வழிவகுக்கும். எனவே, இரவில் குளித்தால் சோர்வு நீங்கும்.
வலியிலிருந்து நிவாரணம்
இரவில் வெந்நீரில் குளித்தால் தலைவலி, தசை, மூட்டுவலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் பெறலாம். இதனால் உங்கள் உடல் இலகுவாகவும், தளர்வாகவும் இருக்கும்.
மன அழுத்தம் குறையும்
இரவில் குளித்தால் மன அழுத்தத்தைக் குறைக்கலாம். இது உடலை ரிலாக்ஸ் செய்து, அமைதியான உணர்வை ஏற்படுத்துகிறது. மேலும், நபரின் மனநிலை புத்துணர்ச்சி பெறுகிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.