சூரியகாந்தி எண்ணெய் மட்டுமல்ல. சூரியகாந்தி விதை சாப்பிட்டாலும் இதெல்லாம் கிடைக்கும்.

By Gowthami Subramani
21 Dec 2023, 18:55 IST

சூரியகாந்தி எண்ணெய் மட்டுமே பயன்தரும் என பலரும் நினைத்திருப்போம். உண்மையில், சூரியகாந்தி விதைகளும் உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகின்றன

ஊட்டச்சத்துக்கள்

ஒரு அவுன்ஸ் அதாவது 30 கிராம் அல்லது 1/4 கப் அளவு வறுத்த சூரியகாந்தி விதைகளில் 14 கிராம் கொழுப்பு, 163 கலோரிகள், 1.5 கிராம் நிறைவுற்ற கொழுப்பு போன்றவை நிறைந்துள்ளது

உடற்பயிற்சி செய்ய

உடற்பயிற்சி செய்வதற்கு ஏராளமான ஆற்றல் தேவை. இந்த ஆற்றலை சூரியகாந்தி விதைகளின் மூலம் பெறலாம். இதில் தயாமின் என்ற சக்திவாய்ந்த சாறு நிறைந்துள்ளது

உடல் கொழுப்புகளைக் கரைக்க

சூரியகாந்தி விதைகளில் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்த மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. இதன் மூலம் இதய நோய் ஏற்படாமல் தடுக்கிறது

சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு

சூரியகாந்தி விதைகளில் உள்ள பல்வேறு மூலக்கூறுகள் நீரிழிவு நோயைக் குறைக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதிலுள்ள குளோரோஜெனிக் அமிலம் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது

பசியைக் கட்டுப்படுத்த

சூரியகாந்தி விதைகள் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்தாலும் இதில் அதிகளவு கலோரிகள் உள்ளது. இவை வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதன் மூலம் பசியைக் குறைத்து மனநிறைவைத் தருகிறது

ஹார்மோன் சமநிலைக்கு

சூரியகாந்தி விதைகளில் உடலில் ஹார்மோன் சமநிலையைக் கட்டுப்படுத்தக் கூடிய என்சைம்கள் நிறைந்துள்ளன. மேலும், இது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் முன்நோய்க்குறி, தைராய்டு அறிகுறிகளை நிர்வகிக்க உதவுகிறது

புற்றுநோயை எதிர்த்து

இதில் வைட்டமின் ஈ, செலினியம், தாமிரம் போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை புற்றுநோய் செல்களின் வீரியத்தைக் குறைத்து, புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது

செரிமான மேம்பாட்டிற்கு

சூரியகாந்தி விதைகளில் உள்ள நொதிகள் செரிமான சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. மேலும், உடலில் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுவதுடன், மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்க்க உதவுகிறது