நார்ச்சத்து, புரதம், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த சியா விதைகளை தினசரி ஊற வைத்து சாப்பிடுவது நல்லதா என பார்க்கலாம்.
சியா விதைகளை தினசரி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிக நல்லதே என்றாலும் இதன் நன்மைகளை பார்க்கும் முன்பாக இதை அளவாக சாப்பிட வேண்டும்.
சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சும். இது உங்களை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
அதிக நார்ச்சத்து ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
சியா விதைகளை ஊறவைக்கும் போது உங்கள் வயிற்றில் விரிவடைந்து, நீண்ட நேரம் நிறைவாக உணரவும், எடை குறைக்கவும் உதவுகிறது.