சமைத்த காய்கறிகளை விட சமைக்கப்படாத காய்கறிகளில் சத்துக்கள் அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா? வாருங்கள் படித்து பயன்பெறலாம்.
கொழுப்பு குறையும்
காய்கறிகளைச் சமைக்காமல் பச்சையாக உட்கொள்வது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் நல்ல கொழுப்பின் அளவும் சீராக இருக்கும்.
எடை இழப்பு
சமைக்கப்படாத காய்கறிகள் எடை இழப்பு மற்றும் உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகின்றன. இதைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் சிறந்த வளர்ச்சிதை மாற்றத்தைப் பெறலாம்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன
சமைக்கப்படாத காய்கறிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இது சர்க்கரை நோய், புற்றுநோய், பார்கின்சன் நோய், கண்புரை போன்ற பல நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
ஆற்றல் நிறைந்தவை
சமைக்கப்படாத காய்கறிகளை உட்கொள்வது உடலின் ஆற்றல் மட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உங்களுக்கு சீக்கிரம் பசி எடுக்காது. மேலும், ஆரோக்கியத்தில் நேர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன.
சருமம் ஜொலிக்கும்
சமைக்கப்படாத காய்கறிகளைச் சாப்பிடுவது, உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல சருமத்திற்கும் அதிக நன்மை தரும். இதில் ஏராளமான வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் காணப்படுகின்றன. இது உங்கள் சரும அழகை மேம்படுத்தும்.