பனீரை பச்சையாக சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

By Devaki Jeganathan
25 Jan 2024, 14:46 IST

பனீர் என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் பாலாடைக்கட்டியை சமைத்து மட்டுமல்ல, பச்சையாக சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது உங்களுக்கு தெரியுமா? இதில் உள்ள சத்துக்கள் உடல் பல நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. இதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

சத்துக்கள் நிறைந்தது

வைட்டமின் பி, புரதம், கால்சியம், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் பனீரில் ஏராளமாக உள்ளது.

எலும்புகளை பலப்படுத்தும்

பனீர் எலும்புகளை வலுப்படுத்த உதவுகிறது. இதில், கால்சியம் ஏராளமாக உள்ளது, இது எலும்புகளை வலுப்படுத்துவதோடு, மூட்டு வலியிலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

பனீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. அதன் நுகர்வு தொற்று நோய்களிலிருந்தும் பாதுகாக்கிறது.

இரத்த அழுத்தம்

பனீரில் உள்ள பொட்டாசியம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. எனவே, இதய நோயாளிகள் பனீரை பச்சையாக சாப்பிடலாம்.

தோலுக்கு நல்லது

தோல் மற்றும் முடி ஆரோக்கியமாக இருக்க பச்சை பனீர் சாப்பிடலாம். பாலாடைக்கட்டியில் உள்ள புரதம் தோல் தொடர்பான நோய்களைக் குணப்படுத்த உதவுகிறது.

தசைகளை பலப்படுத்தும்

தசைகளை அதிகரிக்கவும் வலுப்படுத்தவும் பச்சை பனீர் சாப்பிடலாம். இதில், புரதம் உள்ளது, இது தசைகளை பலப்படுத்துகிறது.