ஊதாநிற கேரட் சாப்பிட்ருக்கீங்களா? இது தெரிஞ்சா கண்டிப்பா சாப்பிடுவீங்க

By Gowthami Subramani
22 Apr 2025, 14:41 IST

நாம் பெரும்பாலும் வெளிர் சிவப்பு/குங்குமப்பூ நிற கேரட்டுகளையே சாப்பிட்டுருப்போம். ஆனால், ஊதா நிறத்தில் உள்ள கேரட் பற்றி தெரியுமா? இது உடலுக்குப் பல நன்மைகளைத் தருகிறது. இதில் ஊதா நிற கேரட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்

உடல் எடையைக் குறைக்க

ஊதா நிற கேரட்டுகள் குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்தவையாகும். இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இதன் மூலம் உடல் எடையிழப்பை ஆதரிக்கிறது

இதய ஆரோக்கியத்திற்கு

ஊதா நிற கேரட்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இவை உடலில் தேங்கிய கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது

நாள்பட்ட நோய்களைத் தடுக்க

ஊதா நிற கேரட்டில் அந்தோசயனின் எனப்படும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடவும், நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது

கண்களின் ஆரோக்கியத்திற்கு

இந்த கேரட்டில் பீட்டா கரோட்டின் மற்றும் லுடீன் போன்றவை நிறைந்துள்ளது. இவை கண் பார்வையை மேம்படுத்தி, வயது தொடர்பான கண் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது

சரும ஆரோக்கியத்திற்கு

இதில் உள்ள வைட்டமின் சி போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இவை சருமத்தின் வயதான விளைவுகளைக் குறைத்து பளபளப்பாக மற்றும் இளமையாக வைத்துக் கொள்ள உதவுகிறது

மூளை செயல்பாட்டிற்கு

ஊதா நிற கேரட்டில் நிறைந்துள்ள அந்தோசயனின் நினைவாற்றல் மற்றும் சிந்தனை சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் நரம்புச் சிதைவு நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம்