குளிர்ந்த காலநிலையில் பப்பாளி உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் குளிர்காலத்தில் பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த
பப்பாளியில் வைட்டமின் ஏ, சி, ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது
நார்ச்சத்துக்கள் நிறைந்த
பப்பாளி நார்ச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். இது மலச்சிக்கல் பிரச்சனையை போக்கவும், குடலியக்கத்தை எளிதாக்கவும் உதவுகிறது
எடையைக் குறைப்பதற்கு
பப்பாளியில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இது வயிற்றை நீண்ட நேரம் முழுமையாக வைத்திருக்கவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது
வளர்சிதை மாற்றம் அதிகரிக்க
பப்பாளியைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் வயிறு சுத்தமாக இருக்கும். மேலும் இது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது
அழற்சி எதிர்ப்பு நிறைந்த
பப்பாளி அழற்சி எதிர்ப்பு நிறைந்த பழமாகும். இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த
இதில் உள்ள நார்ச்சத்து, பொட்டாசியம், ஆன்டி- ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது