காலை உணவாக பாலுடன் ஓட்ஸ் சாப்பிடுவதன் நன்மைகள்!

By Devaki Jeganathan
05 Jan 2024, 11:42 IST

நம்மில் பலர் காலை உணவாக பாலுடன் ஓட்ஸ் சேர்த்து சாப்பிடுவோம். இன்னும் சிலர் ஓட்ஸ்-யை மசாலா பொருட்கள் சேர்த்து கஞ்சி செய்தும் சாப்பிடுவோம். காலை உணவாக பாலுடன் ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

வயிறு ஆரோக்கியம்

தினமும் காலை உணவாக பால் ஓட்ஸ் சாப்பிட்டு வந்தால் வயிறு ஆரோக்கியத்திற்கு நல்லது. இதில், அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது வயிற்றை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதனை உட்கொள்வதால் மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் ஏற்படாது.

எடை இழப்பு

ஓட்ஸ்-யை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை குறையும். இதில், நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனை உட்கொள்வதால் நீண்ட நேரம் நிறைவாக இருக்கும். எனவே, நீங்கள் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

BP-யை கட்டுப்படுத்தும்

ஓட்ஸ்-யில் பாலிபினால்களின் பண்புகள் உள்ளன, இது உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. தவிர, பிபியைக் கட்டுப்படுத்தவும் இது செயல்படுகிறது.

ஹீமோகுளோபின் அதிகரிக்கும்

ஓட்ஸ்-யை பாலுடன் சேர்த்து உட்கொள்வதால் உடலுக்கு இரும்புச்சத்து அதிகம் கிடைக்கும். இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.

ஆரோக்கியமான எலும்பு

தினமும் காலை உணவாக பாலுடன் கஞ்சி சாப்பிடுவதால், மெக்னீசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் கிடைக்கும். இதனை உட்கொள்வதால் உடலின் எலும்புகள் வலுவடையும். மேலும், எலும்பு தொடர்பான நோய்கள் ஏற்படும் அபாயமும் குறைகிறது.