மாம்பழம்
மாம்பழம் சுவையானது மட்டுமல்லாமல், ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகவும் கருதப்படுகிறது. இதை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்
செரிமானத்தை மேம்படுத்த
இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை போக்க உதவுகிறது. மேலும் பச்சை மாம்பழம் சாப்பிடுவதன் மூலம் அஜீரணம், வீக்கம், மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபடலாம்
உடல் எடை குறைய
மாம்பழம் குறைந்த கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கொண்டுள்ளதால், இவை உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும், மாம்பழத்தில் தோலில் பைட்டோ கெமிக்கல்கள் இருப்பதால், இவை உடலில் கொழுப்பை எரிக்க உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
மாம்பழத்தில் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, உடலில் உள்ள எலக்ட்ரோலைட்களை சமன் செய்கிறது. தன் மூலம் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது
கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த
மாம்பழத்தில் பீட்டா கரோட்டின்கள் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலில் வைட்டமின் ஏ ஆக மாற்றப்பட்டு கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
மாம்பழத்தில் வைட்டமின் சி சத்துக்கள் காணப்படுகின்றன. இது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவதுடன், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம் நோய்த்தொற்றுக்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கலாம்
சரும ஆரோக்கியத்திற்கு
மாம்பழத்தில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளது. இவை சருமத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இயற்கையாகவே மாம்பழம் சூடாக இருப்பதால், இதை சாப்பிடும் முன்னதாக தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இதன் மூலம் சருமம் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்
புற்றுநோயை எதிர்த்துப் போராட
இதில் உள்ள பல்வேறு பண்புகள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் போன்றவை புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது
எப்போது சாப்பிடலாம்?
மாம்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை விட, மதிய நேரத்தில் சாப்பிடுவது சரியான நேரமாகக் கருதப்படுகிறது. அதே சமயம், இரவில் மாம்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்