தினமும் சோம்பு சாப்பிடுங்க.! பல நன்மைகள் இருக்கு..

By Ishvarya Gurumurthy G
07 Feb 2024, 13:47 IST

தினமும் பெருஞ்சீரகம் எடுத்துக்கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இதன் நன்மைகள் குறித்து இங்கே விரிவாக காண்போம்.

சர்க்கரை கட்டுப்படும்

சோம்பு விதைகளில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவுகிறது.

இதய ஆரோக்கியம்

சோம்பு விதைகளில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது இரத்த அழுத்தத்தை குறைத்து, இதயம் சார்ந்த பிரச்னைகளை தடுக்கிறது.

ஆரோக்கியமான சருமம்

பெருஞ்சீரகத்தில் அழர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சருமத்தில் முகப்பரு, தடிப்பு போன்றவற்றை ஏற்படாமல் தடுக்கிறது. இதனால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.

பார்வை திறன் அதிகரிக்கும்

வைட்டமின் ஏ-வின் சிறந்த ஆதாரமாக பெருஞ்சீரகம் திகழ்கிறது. இது பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.

பசியை போக்கும்

சோம்பு விதைகளில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது உங்களை முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் பசி கட்டுப்படும்.

செரிமானம் மேம்படும்

பெருஞ்சீரகத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்தும். இதனால் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் ஏற்படாது.