கோழி முட்டைகளைப் போலவே, வாத்து முட்டைகளும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதன் நன்மைகள் குறித்து இங்கே காண்போம்.
ஊட்டச்சத்து விவரம்
வாத்து முட்டையின் மஞ்சள் கருவில் கிரிப்டோக்சாந்தின், ஜியாக்சாந்தின், லுடீன் மற்றும் கரோட்டினாய்டுகள் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
வாத்து முட்டை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வாத்து முட்டையின் மஞ்சள் கருவில் பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மன ஆரோக்கியம்
வாத்து முட்டை மன ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதற்கு வாத்து முட்டையில் உள்ள கோலின் தான் காரணம். இது நல்ல தூக்கத்திற்கு வழிவகுக்கும்.
இதயத்திற்கு நன்மை
வாத்து முட்டைகளில் கிரிப்டோக்சாந்தின் மற்றும் ஜியாக்சாந்தின் ஆகியவை இதயத்திற்கு நன்மை பயக்கும். இதை சாப்பிடுவதால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் குறைகிறது.
ஆரோக்கியமான தோல்
வாத்து முட்டையில் லுடீன் மற்றும் ஜீடின் உள்ளது. இது தோல் தொடர்பான பிரச்னைகளை நீக்குகிறது. இதை உண்பதால் முதுமையான தோற்றம் நீங்கும்.
எடை குறையும்
வாத்து முட்டை எடையை குறைக்க உதவுகிறது. இதை சாப்பிடுவதால் வளர்சிதை மாற்றத்தின் அளவு மேம்படும். மேலும், வயிற்றில் சேரும் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
இந்த பதிவில் உள்ள தகவல்கள் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. தனிப்பட்ட கருத்துக்கு மருத்துவரை அணுகவும்.