கோடை காலத்தில் சியா விதைகளை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? இது குறித்து இங்கே காண்போம்.
எதிர்ப்பு பண்புகள்
சியா விதைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம். குளோரோஜெனிக் அமிலம், காஃபிக் அமிலம், மைரிசெடின், குர்செடின், கேம்ப்ஃபெரால் போன்ற நல்ல ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
எடையும் குறையும்
சியா விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது விரைவாக உடல் எடையை குறைக்க உதவும். இவற்றை உட்கொண்டால் உடல் எடை குறையும்.
மாதவிடாய் பிரச்னை தீரும்
பெண்களுக்கு ஏற்படும் ஹார்மோன் பிரச்னைகளை தடுக்க உதவுகிறது. இது மாதவிடாயின் போது வலி மற்றும் பிடிப்புகள் குறைகிறது. மேலும், இரத்த ஓட்டமும் சீராக இருக்கும். ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்னையை நீக்கவும் இது நன்மை பயக்கும்.
வயிறு பிரச்னைக்கு குட் பை
சியா விதைகளை உட்கொள்வது வயிறு தொடர்பான பிரச்னைகளை நீக்குகிறது. இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. இதனால் செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும்.