அன்றாட வாழ்வில் உணவில் சேர்க்க வேண்டிய ஆரோக்கியமான உணவுகளில் முந்திரி பருப்பும் உள்ளது. இதை தொடர்ந்து உட்கொண்டு வருவதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்
எடை இழப்புக்கு
இதில் கலோரி உள்ளடக்கம் இருப்பினும், முந்திரி உட்கொள்வது வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இவை சீரான உணவை ஆதரிப்பதன் மூலம் இழப்புக்கு உதவுகிறது
இதய ஆரோக்கியத்திற்கு
முந்திரியில் நிறைவுறா கொழுப்புகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளன. இவை உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது
எலும்பு ஆரோக்கியத்திற்கு
முந்திரியில் கால்சியம் மற்றும் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை எலும்பு வலிமை மற்றும் அடர்த்திக்கு உதவுகின்றன. மேலும், இது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது
சருமத்தை பளபளப்பாக்க
முந்திரி பருப்புகளில் அதிகளவு செலினியம் நிறைந்துள்ளது. இவை வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளாகச் செயல்பட்டு, சருமத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது
கண் ஆரோக்கியத்திற்கு
முந்திரி பருப்பில் அதிகளவு லுடீன் மற்றும் இன்னும் பிற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் காணப்படுகின்றன. இவை நம் கண்களைச் சேதமடையாமல் பாதுகாக்கவும், ஆரோக்கியமான கண்பார்வைக்கும் உதவுகின்றன. இதை தினசரி எடுத்துக் கொள்வது கண்புரை வராமல் பாதுகாத்துக் கொள்கிறது
நோயெதிர்ப்பு அமைப்பு
முந்திரியில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றங்கள் போன்றவை நிறைந்துள்ளன. இவை உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகின்றன. மேலும் நோயெதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுகின்றன