வெறும் வயித்துல ஆப்பிள் சாப்பிட்டா இந்த பிரச்சனை எல்லாம் வராதாம்

By Gowthami Subramani
17 Apr 2024, 22:06 IST

ஆப்பிள் உட்கொள்வது சுவையுடன் கூடிய ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. காலையில் வெறும் வயிற்றில் ஆப்பிள் உட்கொள்வது என்னென்ன நன்மைகளைத் தரும் தெரியுமா?

கொலஸ்ட்ரால் குறைய

ஆப்பிளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது

செரிமானத்திற்கு உதவ

வெறும் வயிற்றில் ஆப்பிள் உட்கொள்வது வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன், செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இது மலச்சிக்கல்லை நீக்குவதுடன், குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது

நரம்பியல் கோளாறைத் தடுக்க

நியூரான்களை ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்க ஆப்பிளில் உள்ள ஃபிளவனாய்டு குர்செடின் உதவுகிறது. இது நரம்பியல் நோயான அல்சைமர் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது

நீரிழிவு பிரச்சனைக்கு

டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஆப்பிள் சிறந்த நன்மை பயக்கும். இதிலுள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் டைப் 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கிறது

புற்றுநோயைத் தடுக்க

ஆப்பிளில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் மார்பக புற்றுநோய் போன்ற சில புற்றுநோய் உருவாக்கும் வாய்ப்பைக் குறைக்கிறது

ஆரோக்கியமான எடை இழப்புக்கு

இதன் நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மெதுவாக்கி வயிறு நிரம்பிய முழுமையான உணர்வைத் தருகிறது. இதன் மூலம் கூடுதல் உட்கொள்ளலைத் தடுக்கலாம்

நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்க

ஆப்பிளில் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், இதில் அழற்சி எதிர்ப்புப் பண்புகளும் நிறைந்துள்ளன. இவை நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது