தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது என்றாலும், தண்ணீர் குடிக்கும் நேரம் மிகவும் முக்கியம். நம்மில் பலருக்கு தூங்குவதற்கு முன் அல்லது இரவில் நிறைய தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கும். இது ஆரோக்கியத்திற்கு நல்லதா? என தெரிந்து கொள்ளுங்கள்.
இரவில் தண்ணீர் குடிக்கலாமா?
தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடிப்பது சரியானதாக கருதப்படுகிறது. இதன் மூலம், சிறுநீரகங்கள் தங்கள் வேலையைச் சரியாகச் செய்ய முடியும்.
தண்ணீர் குடிப்பதன் சிக்கல்
தூங்கும் முன் உடனடியாக தண்ணீர் குடிப்பதால் வாயுத்தொல்லை, தூக்கமின்மை, அடிக்கடி சிறுநீர் கழித்தல் போன்றவை ஏற்படும்.
சிறுநீரகங்களில் விளைவு
தூங்கும் முன் நிறைய தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். அது சிறுநீரகத்திலும் மோசமான விளைவை ஏற்படுத்தும். உங்களுக்கு ஏற்கனவே சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருந்தால், இரவில் தூங்கும் முன் தண்ணீர் குடிப்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
பகலில் தண்ணீர் குடிக்கவும்
தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள அழுக்குகள் வெளியேறும். அதற்கு, காலை மற்றும் பகலில் நிறைய தண்ணீர் குடிக்கவும்.
இதை கவனியுங்கள்
நீங்கள் இதயம் தொடர்பான பிரச்சனைகள் அல்லது ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தால், இரவில் அதிக தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். இதன் காரணமாக, தூக்க சுழற்சி முழுமையடையாமல், இந்த பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
இதை மனதில் வையுங்க
இரவில் தாகம் எடுத்தால், மெதுவாகவும், சிறிதளவு தண்ணீர் குடிக்கவும். தூங்கும் முன் அதிக தண்ணீர் குடிப்பதால் வாயுத்தொல்லை ஏற்படும்.
கூடுதல் குறிப்பு
இரவில் தண்ணீர் குடிப்பதும் முக்கியம். இல்லையெனில் உடல் வறட்சி அடையும். எனவே, தாகம் எடுக்கும் போதெல்லாம் தண்ணீரைக் குடித்துவிட்டு, இரவில் மெதுவாகப் பருகவும்.