குளிப்பதற்கு முன் தண்ணீர் குடிக்க வேண்டுமா?

By Devaki Jeganathan
30 May 2024, 16:31 IST

உங்களை நீரேற்றமாக வைத்திருக்க, ஒரு நாளைக்கு 7-8 கிளாஸ் தண்ணீர் அவசியம். இதனால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அதே சமயம் சிலர் குளிப்பதற்கு முன் தண்ணீர் குடிப்பது சரியா? என்பது பற்றி பார்க்கலாம்.

குளிப்பதற்கு முன் தண்ணீர்

உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். ஆனால் குளிப்பதற்கு முன் தண்ணீர் குடித்தால் இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்.

ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்

குளிப்பதற்கு முன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள முடியும்.

யார் தண்ணீர் குடிக்கக்கூடாது?

உங்களுக்கு குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தால், குளிப்பதற்கு முன் தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு செய்வது உங்கள் உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

குளிப்பதற்கு முன் ஏன் தண்ணீர் குடிக்கக்கூடாது

குளிப்பதற்கு முன் தண்ணீரை உட்கொள்வது குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக தலைச்சுற்றல் அல்லது உடல் சக்தியை இழக்க நேரிடும்.

குளித்த பிறகு தண்ணீர்

குளிக்கும்போது உடல் அசைவு இருக்கும். இந்நிலையில், சில நேரங்களில் நமது இரத்த அழுத்தம் சிறிது அதிகரிக்கிறது. இதை சீராக்க, குளித்த பிறகு தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும்.

சிறந்த நேரம்

தினமும் காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். இதனால், உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறும்.

உட்கார்ந்து குடிக்கவும்

குளிப்பதற்கு முன்பும் பின்பும் நின்று கொண்டு தண்ணீர் குடிக்கக் கூடாது. உட்கார்ந்து பருகும்போது தண்ணீரை உட்கொள்வது எப்போதும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.